சான்றிதழ் மற்றும் டிப்ளோமா கற்கைநெறிகள்
இரண்டாம் மொழி சிங்கள டிப்ளோமா
இக் கற்கைநெறி பங்குபற்றுபவர்களின் கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுதுதல் ஆகிய திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது கற்பவர்களுக்கு சிங்கள இலக்கியம், கலாச்சாரம் மற்றும் இலக்கணத்தையும் அறிமுகம் செய்கின்றது. இது பயனுறுதிவாய்ந்த தொடர்பாடலுக்கான முக்கிய மொழித்தேர்ச்சிகளை உள்ளடக்கும் ஆறு மொடியூல்களை உள்ளடக்குகின்றது. இது சிங்கள மொழியை இரண்டாம் மொழியாகக் கற்பதற்கு கட்டமைக்கப்பட்ட பயிற்சியைத் தேடும் தனிப்பட்டவர்களுக்கு ஏற்றது.
தேசிய தொழிற் தகைமை (NVQ) மட்டம் - 05
NVQ
இலங்கை தகைமை கட்டமைப்பு (SLQF) மட்டம் - 03
SLQF
மொடியூல்கள்
- DSLS 315: பயனுறுதிவாய்ந்த தொடர்பாடலுக்கான கேட்டல் ஆற்றல்
- DSLS 325: பயனுறுதிவாய்ந்த தொடர்பாடலுக்கான பேசும் ஆற்றல்
- DSLS 335: கிரகித்தலுக்காக வாசித்தல் (புரிந்துணர்வுடன் வாசித்தல்)
- DSLS 345: தொடர்பாடலுக்கான பயனுறுதிவாய்ந்த எழுதும் முறை
- DSLS 355: சிங்கள இலக்கியம் மற்றும் கலாச்சாரத்திற்கான அறிமுகம்
- DSLS 365: பயனுறுதிவாய்ந்த தொடர்பாடலுக்கான இலக்கணம்
நோக்கங்கள்
- உண்மையான பேச்சு மொழியைப் புரிந்துகொள்வதற்கான பங்கேற்பாளரின் ஆற்றலை விருத்திசெய்தல்.
- பயனுறுதிவாய்ந்த வாய்வழித் தொடர்பாடலில் பங்கேற்பாளரின் திறன் மற்றும் வினைத்திறனை விருத்திசெய்தல்.
- உண்மையான எழுத்து மொழியைப் புரிந்துகொள்வதற்கான பங்கேற்பாளரின் ஆற்றலை விருத்திசெய்தல்.
- சிங்கள இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தின் தன்மை பற்றிய அடிப்படை அறிவை கற்பவர்களுக்கு வழங்குதல்.
- சிங்கள இலக்கணத்தில் முழுமையான அறிவை கற்பவர்களுக்கு வழங்குதல்.
- காலம்: 450 மணித்தியாலங்கள்
- கற்கைநெறிக் கட்டணம்: ரூ.48,500.00
- கல்விசார் உத்தியோகத்தர்: ஏ.எம்.ஐ.செவ்வந்தி அத்தநாயக்க
- ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்: பீ.சிவா அஸ்வின்
- இலக்குக் குழு: பொதுமக்கள்
மொழிபெயர்ப்பில் டிப்ளோமா
இக் கற்கைநெறியானது எழுத்து நடை, இலக்கணம் மற்றும் சந்தர்ப்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு ஆவணங்களை மொழிபெயர்ப்பதற்கான திறன்களை விருத்திசெய்வதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இக் கற்கைநெறி சமூக மற்றும் சுற்றுலா தொடர்பான சந்தர்ப்பங்களுக்கான மொழிபெயர்ப்பு கோட்பாடுகள் மற்றும் செயல்முறை உரைபெயர்ப்பு திறன்களையும் கற்பவர்களுக்கு அறிமுகம் செய்கிறது. இது மொழித்தேர்ச்சி மற்றும் கணினி உதவி மொழிபெயர்ப்பு கருவிகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய மொடியூல்களை உள்ளடக்குகின்றது. தொழில்முறை மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு திறமைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட தனிநபர்களுக்கு இந் நிகழ்ச்சித்திட்டம் ஏற்றது.
தேசிய தொழிற் தகைமை (NVQ) மட்டம் - 05
NVQ
இலங்கை தகைமை கட்டமைப்பு (SLQF) மட்டம் - 03
SLQF
மொடியூல்கள்
- DITR 314: மொழிபெயர்ப்பு நோக்கத்திற்கான மொழி பற்றிய விழிப்புணர்வு
- DITR 326: மொழி அ மற்றும் செயன்முறை மொழிபெயர்ப்பில் தேர்ச்சி
- DITR 336: மொழி ஆ மற்றும் செயன்முறை மொழிபெயர்ப்பில் தேர்ச்சி
- DITR 346: மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்புக் கோட்பாடுகளிற்கான அறிமுகம்
- DITR 354: கணினி உதவியுடனான மொழிபெயர்ப்பு
- DITR 364: சமூக உரைபெயர்ப்பு
நோக்கங்கள்
- ஆவணத்தின் சூழ்நிலைத் தேவை மற்றும் நோக்கத்துடன் தொடர்புடைய எழுத்து நடையை அடையாளங்காணல்.
- ஆவணத்தின் இலக்கணம் மற்றும் கற்றல் பயன்பாட்டு விதிகள், வகைப்பாட்டு விதிகள் மற்றும் மரபுகளை விருத்திசெய்தல்.
- ஆ மொழியிலிருந்து அ மொழிக்கு ஆவணங்களை மொழிபெயர்க்க எழுதும் திறன்களை விருத்திசெய்தல்.
- மொழிபெயர்ப்புச் செயன்முறை பற்றிய அடிப்படை புரிதலை விருத்திசெய்தல் மற்றும் அதை விளக்குவதற்கு பொருத்தமான கோட்பாடுகளை ஆராய்தல்.
- மொழிபெயர்ப்பு நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கும் விரைவுபடுத்துவதற்கும் கணினி திறன்களை ஏற்றுக்கொள்ளுதல்.
- விசேட சமூக சூழ்நிலைகள் மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் தேவைகளை சமாளிப்பதற்கு உரைபெயர்ப்புத் திறன்களைப் பயன்படுத்துதல்.
- காலம்: 450 மணித்தியாலங்கள்
- கற்கைநெறிக் கட்டணம்: ரூ.48,500.00
- கல்விசார் உத்தியோகத்தர்: ஏ.எம்.ஐ.செவ்வந்தி அத்தநாயக்க
- ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்: ஹிரோஷிமா பெரேரா
- இலக்குக் குழு: பொதுமக்கள்
சைகை மொழியில் டிப்ளோமா (தமிழ் மொழி மூலம்)
இக் கற்கைநெறி, குறிப்பாக தமிழ் பேசும் செவிடர் சமூகங்களுக்குள், இலங்கை சைகை மொழியில் (SLSL) சரளமாகப் பேசுவதை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இக் கற்கைநெறி, கலாச்சார ரீதியாக உணர்திறன் மிக்க தகவல்தொடர்பாடலுக்கு முக்கியத்துவம் அளித்து, சொற்களஞ்சியம், இலக்கணம், மொழியியல் கோட்பாடு மற்றும் உரைபெயர்ப்புத் திறன்களை உள்ளடக்குகிறது. இது நடைமுறை களப்பணியையும் உள்ளடக்குகிறது. இது மாணவர்கள் செவிடர் கல்வி மற்றும் சமூக சேவையில் நிஜ உலக அனுபவத்தைப் பெற அனுமதிக்கிறது. முக்கிய மொடியூல்கள் சைகை மொழி அடிப்படைகள், அதன் வரலாற்று வளர்ச்சி, தகவல் தொடர்பாடல் நுட்பங்கள் மற்றும் பயன்பாட்டு குறியீட்டியல் ஆகியவற்றை ஆராய்கின்றன.
தேசிய தொழிற் தகைமை (NVQ) மட்டம் - 05
NVQ
இலங்கை தகைமை கட்டமைப்பு (SLQF) மட்டம் - 03
SLQF
மொடியூல்கள்
- DSSL 315: சைகை மொழியின் அடிப்படை
- DSSL 325: இலங்கை சைகை மொழியின் தோற்றம் மற்றும் வளர்ச்சி
- DSSL 335: மொழியியல் மற்றும் குறியீட்டியல்
- DSSL 345: தொடர்பாடல் மற்றும் உரைபெயர்ப்பு
- DSSL 355: களப்பணி மற்றும் பயிற்சி
இக் கற்கைநெறியின் நோக்கங்கள்
- அத்தியாவசிய சொற்களஞ்சியம், இலக்கணம், வாக்கிய அமைப்பு மற்றும் முகபாவனைகள் மற்றும் சைகைகள் போன்ற சொற்கள் அல்லாத கூறுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், சைகை மொழியில் வலுவானதொரு அடித்தளத்தை உருவாக்குதல்.
- இலங்கை சைகை மொழியின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை ஆராய்தல், குறிப்பாக தமிழ் பேசும் செவிடர் சமூகங்களுக்குள் பிராந்திய மற்றும் கலாச்சார தாக்கங்களை வலியுறுத்துதல்.
- கற்பவர்கள் காட்சி-சைகை தொடர்பாடல்களின் அமைப்பு, பொருள் மற்றும் செயற்பாடுகளைப் புரிந்துகொள்ள உதவுவதன்மூலம் மொழியியல் மற்றும் குறியீட்டியல் கொள்கைகளை அறிமுகப்படுத்துதல்.
- தொடர்பாடல் மற்றும் உரைபெயர்ப்பு ஆகியவற்றில் சரளமாகப் பேசுவதை விருத்திசெய்வதற்கு, கற்பவர்களை சைகை மொழியைப் பயன்படுத்தி, அன்றாட, கல்வி மற்றும் தொழில்முறை உரையாடல்களில் ஈடுபடத் தயார்படுத்துதல்.
- மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு ஆகிய திறன்களை விருத்திசெய்தல். தமிழ் மற்றும் சைகை மொழி பயனர்களிடையே துல்லியமான மற்றும் கலாச்சார ரீதியாக உணர்திறன் மிக்க தகவல்தொடர்பாடல்களில் கவனம் செலுத்துதல்.
- செவிடர் கல்வி, உரைபெயர்ப்பு மற்றும் சமூக சேவையில் நிஜ வாழ்க்கை அனுபவத்தை வழங்குவதன் மூலம் களப்பணி மற்றும் பயிற்சி மூலம் பெற்ற திறன்களைப் பயன்படுத்துதல்.
- செவிடர் சமுதாயம் மற்றும் அடையாளம் குறித்த விழிப்புணர்வை ஊக்குவித்தல், செவிடர் தனிநபர்களின் மொழியியல் உரிமைகளுக்கான மரியாதை மற்றும் உள்ளடக்கிய மனப்பான்மைகளை ஊக்குவித்தல்.
- கற்கைநெறியின் பெயர்: சைகை மொழியில் டிப்ளோமா (தமிழ் மொழி மூலம்)
- காலம்: 450 மணித்தியாலங்கள்
- கற்கைநெறிக் கட்டணம்: ரூ.48,500.00
- கல்விசார் உத்தியோகத்தர்: எல்.எம்.ரித்மா நிஷாதினி லன்சகார
- ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்: பீ. சிவா அஸ்வின்
- இலக்குக் குழு: சைகை மொழியில் SLQF மட்டம் 2 ஐ பூர்த்திசெய்த நபர்கள் மற்றும் இந் நிகழ்ச்சித்திட்டத்தை தொடர ஆர்வமாக உள்ளவர்கள்
இரண்டாம் மொழி தமிழ் டிப்ளோமா
இரண்டாம் மொழித் தமிழ் டிப்ளோமோ கற்பவர்களுக்குத் தமிழ் மொழியில் வலுவான அடிப்படைத் திறன்களை வளர்க்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி கட்டமைக்கப்பட்ட ஆழமான கற்றல் மூலம் மொழியியல் நம்பிக்கை மற்றும் கலாசாரப் புரிதலை ஊக்குவிக்கிறது.
தேசிய தொழிற் தகைமை (NVQ) மட்டம் - 05
NVQ
இலங்கை தகைமை கட்டமைப்பு (SLQF) மட்டம் - 03
SLQF
மொடியுல்கள்
- SLTD 101: இரண்டாம் மொழியின் ஒலி அமைப்பு மற்றும் எழுத்துகள்
- SLTD 102: பேச்சுத் தமிழின் சொல் உருவாக்கம்
- SLTD 103: பேச்சுத் தமிழில் எளிய வாக்கியங்களை உருவாக்குதல்
- SLTD 104: கேட்டல் மற்றும் பேச்சுத் தொடர்புத் திறன்
- SLTD 105: எழுத்துத் தமிழின் உருவவியல் மற்றும் தொடரியல் அமைப்பு
- SLTD 106: எழுத்துத் தமிழின் தொடரியல் அறிமுகம்
- SLTD 107: மேம்பட்ட தமிழ் எழுத்து வடிவம் - அன்றாடத் தேவைகளுக்கான எழுத்து வடிவம்
- SLTD 108: இரண்டாம் மொழியின் வரலாறு
- SLTD 109: தமிழ் மக்களின் பண்பாடு
- SLTD 110: தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கியம்
பாடநெறியின் நோக்கங்கள்
- இரண்டாம் மொழி கற்பவர்களுக்கு உயர்தர தமிழ் மொழிக் கல்வியை வழங்குதல்.
- வாசிப்பு, எழுதுதல், கேட்டல் மற்றும் பேசுதல் ஆகிய முக்கிய துறைகளில் தொடர்பு திறன்களை வலுப்படுத்துதல்.
- தமிழ்க் கலாசாரம் மற்றும் அன்றாட வாழ்வில் அதன் பயன்பாடு பற்றிய புரிதலை ஆழப்படுத்துதல்.
- தமிழ் மொழியின் தன்னம்பிக்கையுள்ள, சுதந்திரமான பயன்பாட்டார்களை உருவாக்குதல்.
- தமிழைத் திறம்படக் கற்றுக் கற்பிக்கும் திறன் கொண்ட திறமையான இரண்டாம் மொழி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்
- கல்வி, சமூக மற்றும் அரச துறைகளில் பணியாற்றும் திறன் கொண்ட திறமையான மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் சமகால மொழிபெயர்ப்பாளர்களுக்கு பயிற்சி அளித்தல்
- பயனுள்ள தகவல் தொடர்புக்கு மொழியியல் மற்றும் கலாசார சரளத்தை வழங்குதல்.
- பன்மொழி அமைப்புகளில் தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் ஆதரவளித்தல்.
- தமிழ் பேசும் சூழலில் நம்பிக்கையுடன் செயற்படுவதற்கான கருவிகளைக் கற்பவர்களுக்கு வழங்குதல்.
- கற்கைநெறியின் பெயர்: இரண்டாம் மொழி தமிழ் டிப்ளோமா
- காலம்: 450 மணித்தியாலங்கள்
- கற்கைநெறிக் கட்டணம்: ரூ.48,500.00
- கல்விசார் உத்தியோகத்தர்: பாலரஞ்சனி ஜெகநாதன்
- ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்: மதூக்கா தரங்கனி
- இலக்குக் குழு: பொது மக்கள்
ஆங்கில மொழியில் அடிப்படை கற்கைநெறி
இக் கற்கைநெறியானது தெளிவு, சரளமாகப் பேசுதல் மற்றும் அன்றாட தொடர்பாடல்களின் மீது கவனம் செலுத்தி, அத்தியாவசியமான பேச்சு ஆங்கில திறன்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது கற்பவர்கள் மிகவும் இயல்பாகவும் நம்பிக்கையுடனும் பேச உதவுகின்ற வகையில் இலக்கணம், சொற்களஞ்சியம், கேட்கும் திறன் மற்றும் உச்சரிப்பு ஆகியவற்றை வலியுறுத்துகின்றது. கற்கைநெறியானது தயக்கத்தைக் குறைப்பதற்கும் மற்றும் நிஜ வாழ்க்கை தொடர்பாடல்களை மேம்படுத்துவதற்கும் வகிபாகம் ஏற்று நடித்தல் மற்றும் சூழ்நிலைக்கேற்ற உரையாடல்கள் போன்ற ஊடாடும் முறைகளை உள்ளடக்குகின்றது. இது அடிப்படை இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியம் மற்றும் அடிப்படை தொடர்பாடல் திறன்கள் மற்றும் வாய்மூலத் தேர்ச்சி ஆகிய இரண்டு மொடியூல்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது.
மொடியூல்கள்
- ENGF 001: அடிப்படை இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியம்
- ENGF 002: அடிப்படை தொடர்பாடல் திறன்கள் மற்றும் வாய்மூலத் தேர்ச்சி
நோக்கங்கள்
- பேச்சில் தெளிவு, சரளமாகப் பேசுதல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் அன்றாட தொடர்பாடல்களுக்கு அத்தியாவசியமான பேச்சு ஆங்கில திறன்களை விருத்திசெய்தல்.
- கற்பவர்களுக்கு எளிமையான, சரியான மற்றும் அர்த்தமுள்ள வாக்கியங்களை உருவாக்குவதற்கு உதவுகின்ற அடிப்படை இலக்கண கட்டமைப்புக்கள் மற்றும் சொற்களஞ்சியம் ஆகியவற்றை அறிமுகம் செய்து வலுப்படுத்துதல்.
- அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய கலந்துரையாடல்கள், வகிபாகம் ஏற்று நடித்தல் மற்றும் சூழ்நிலை உரையாடல்கள் போன்ற வழிகாட்டப்பட்ட செயன்முறை மூலம் வாய்மூல தொடர்பாடலை மேம்படுத்துதல்.
- உச்சரிப்பு, அழுத்தம் மற்றும் குரலேற்றத்தாழ்வு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு, கற்பவர்களுக்கு மிகவும் இயல்பாகவும் புத்திசாலித்தனமாகவும் ஆங்கிலத்தில் பேசுவதற்கு உதவுதல்.
- கேட்கும், புரிந்துகொள்ளும் திறன்களை உருவாக்குவதற்கு, பழக்கமான மற்றும் வழக்கமான சூழ்நிலையில் கற்பவர்கள் பேச்சு ஆங்கிலத்தை புரிந்துகொள்வதற்கு அனுமதித்தல்.
- வாழ்த்துதல், வினாக்களைக் கேட்டல் மற்றும் பதிலளித்தல், வழிகாட்டுதல்களை வழங்குதல் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய செயன்முறை வெளிப்படுத்தல்கள் மற்றும் பணியாற்றும் மொழிகளுடன் கற்பவர்களை தயார்படுத்துதல்.
- தன்னம்பிக்கையை வளர்த்தல் மற்றும் பேச்சில் பதட்டத்தைக் குறைத்தல், செயற்படு பங்குபற்றுதலுக்கான ஆதரவாக கற்றல் சூழலை உருவாக்குதல்.
- ஊடாடும் மற்றும் பணி அடிப்படையிலான கற்றலை ஊக்குவிக்க, மாணவர்களுக்கு நிகழ் நேர கலந்துரையாடல்களில் இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியத்தைப் பயன்படுத்துவதற்கு உதவுதல்.
- கற்கைநெறியின் பெயர்: ஆங்கில மொழியில் அடிப்படை கற்கைநெறி
- காலம்: 50 மணித்தியாலங்கள்
- கற்கைநெறிக் கட்டணம்: ரூ.6,000.00
- கல்விசார் உத்தியோகத்தர்: எல்.எம். ரித்மா நிஷாதினி லன்சகார
- ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்: பீ. சிவா அஸ்வின்
- இலக்குக் குழு: க.பொ.த. சாதாரண தரப் (சா/த) பரீட்சையைப் பூர்த்திசெய்தவர்கள் மற்றும் இந் நிகழ்ச்சித்திட்டத்தை தொடர ஆர்வமுள்ளவர்கள்
- முன்னைய தேவைகள்: அடிப்படை ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எளிய சொற்கள் பற்றிய அறிவு
தொடக்கநிலையாளர்களுக்கான ஆங்கிலம்
இக் கற்கைநெறியானது உரையாடல்கள், வகிபாகம் ஏற்று நடித்தல், மற்றும் குழுக் கலந்துரையாடல்கள் போன்ற ஊடாடும் முறைகள் மூலம் சரளமாகப் பேசுதல், உச்சரிப்பு மற்றும் நம்பிக்கை என்பவற்றை விருத்திசெய்கின்றது. கற்பவர்கள் வாழ்த்துக்கள், கோரிக்கைகள் மற்றும் சமுதாய தொடர்புகள் போன்ற நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளுக்கான செயன்முறை சொற்களஞ்சியம் மற்றும் பணியாற்றும் மொழி ஆகியவற்றைப் பெறுகின்றனர். இது அடிப்படை இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியம் மற்றும் அடிப்படை தொடர்பாடல் மற்றும் வாய்மூலத் தேர்ச்சி ஆகிய இரண்டு பிரதான மொடியூல்களை உள்ளடக்குகின்றது.
மொடியூல்கள்
- ENGB 001: அடிப்படை இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியம்
- ENGB 002: அடிப்படை தொடர்பாடல் திறன்கள் மற்றும் வாய்மூலத் தேர்ச்சி
நோக்கங்கள்
- அன்றாட தொடர்பாடல் சூழ்நிலைகளில் சரளமாகப் பேசுதல், உச்சரிப்பு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் அடிப்படை பேச்சு ஆங்கில திறன்களை விருத்திசெய்தல்.
- கற்பவர்களுக்கு எளிமையான மற்றும் சரியான மற்றும் அர்த்தமுள்ள வாக்கியங்களை உருவாக்குவதற்கு உதவுகின்ற அடிப்படை இலக்கண கட்டமைப்புக்கள் மற்றும் சொற்களஞ்சியம் ஆகியவற்றை அறிமுகம் செய்து பயிற்சியளித்தல்.
- கேட்கும் மற்றும் பேசும் ஆற்றல்களை விருத்திசெய்வதற்கு பழக்கமான சூழல்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வெளிப்பாடுகளை புரிந்துகொள்வதற்கும் பதிலளிப்பதற்கும் கற்பவர்களுக்கு உதவுதல்.
- வாழ்த்துகள், சுய அறிமுகங்கள், தகவல்களைக் கேட்டல், கோரிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல் போன்ற அன்றாட தொடர்பாடல்களுக்கான பணியாற்றும் மொழிகளை கற்பவர்களுக்கு வழங்குதல்.
- வகுப்பறை கலந்துரையாடல்கள், சமூக தொடர்புகள் மற்றும் அடிப்படை சேவை சந்திப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளில் ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதில் நம்பிக்கையை வளர்த்தல்.
- உச்சரிப்பு, வாக்கிய அழுத்தம் மற்றும் குரலேற்றத்தாழ்வு முறைகள் ஆகியவற்றில் வழிக்காட்டப்பட்ட பயிற்சி மூலம் பேச்சில் தெளிவு மற்றும் துல்லியத்தன்மையை மேம்படுத்துதல்.
- இணை வேலை, குழு விவாதங்கள், வகிபாகம் ஏற்று நடித்தல், மற்றும் உரையாடல்கள் போன்ற பேச்சு நடவடிக்கைகளில் செயல்படு பங்குபற்றுதலை ஊக்குவித்தல்.
- குடும்பம், உணவு, பொருட்களைக் கொள்வனவு செய்தல் மற்றும் போக்குவரத்து போன்ற தலைப்புகள் உள்ளிட்ட கற்பவரின் உடனடி சுற்றுச்சூழல் மற்றும் தேவைகளுக்கு பொருத்தமான சொற்களஞ்சிய விருத்திக்கு ஆதரவளித்தல்.
- ஆங்கிலம் கற்பதற்கான நேர்மறையான அணுகுமுறையை வளர்த்தல், கற்பவர்களுக்கு பேசுவதில் உள்ள பயம் அல்லது தயக்கத்தை போக்குவதற்கு உதவுதல் மற்றும் தொடர்ச்சியான மொழி அபிவிருத்திக்கு உந்துதலை உருவாக்குதல்.
- கற்கைநெறியின் பெயர்: தொடக்கநிலையாளர்களுக்கான ஆங்கிலம்
- காலம்: 100 மணித்தியாலங்கள்
- கற்கைநெறிக் கட்டணம்: ரூ.12,000.00
- கல்விசார் உத்தியோகத்தர்: எல்.எம். ரித்மா நிஷாதினி லன்சகார
- ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்: பீ. சிவா அஷ்வின்
- இலக்குக் குழு: க.பொ.த. சாதாரண தரப் (சா/த) பரீட்சையைப் பூர்த்திசெய்தவர்கள் மற்றும் இந் நிகழ்ச்சித்திட்டத்தை தொடர ஆர்வமுள்ளவர்கள்
- முன்னைய தேவைகள்: அடிப்படை ஆங்கில சொற்களஞ்சியம் மற்றும் அடிப்படை இலக்கணம் பற்றிய அறிவு
வங்கி ஊழியர்களுக்கான தொழில் ஆங்கிலம்
இக் கற்கைநெறியானது தொழில்முறை வங்கிச் சூழல்களில் வாய்மூல மற்றும் எழுத்துமூல தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இக் கற்கைநெறி தொழில் சொற்களஞ்சியத்தை உருவாக்குதல், வாடிக்கையாளர்களுடனான தொடர்புகளில் சரளமாகப் பேசுவதை விருத்திசெய்தல் மற்றும் மின்னஞ்சல்கள், குறிப்புகள் மற்றும் அறிக்கைகளை எழுதுவதற்கான திறன்களை விருத்திசெய்தல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகின்றது. இது பணியிட தொடர்பாடல்களில் தொழில்முறை, தெளிவு மற்றும் பணிவு ஆகியவற்றை வலியுறுத்துகின்றது. இந் நிகழ்ச்சித்திட்டமானது தொழில் அடிப்படைகள், தொடர்பாடல் மற்றும் வங்கியியல் தொழில்நிபுணர்களுக்கான ஆங்கில மொழியில் எழுதுதல் போன்றவற்றை உள்ளடக்கும் நான்கு மொடியூல்களை உள்ளடக்குகின்றது.
மொடியூல்கள்
- BENG 001: அடிப்படை தொழில் ஆங்கிலம்
- BENG 002: அத்தியாவசிய தொழில் ஆங்கிலம்
- BENG 003: தொடர்பாடல் தொழில் ஆங்கிலம்
- BENG 004: எழுத்துமூல தொழில் ஆங்கிலம்
நோக்கங்கள்
- வங்கியியல் மற்றும் வாடிக்கையாளர் சேவைத் தொடர்புகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அடிப்படை தொழிலுடன் தொடர்புடைய சொற்களஞ்சியம் மற்றும் வெளிப்பாடுகளை உருவாக்குதல்.
- ஊழியர்களுக்கு வாடிக்கையாளர்கள், சக ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுடன் ஆங்கிலத்தில் தொழில்முறையாக தொடர்புகொள்வதற்கு வாய்மூலத் தொடர்பாடல் திறன்களை மேம்படுத்தல்.
- குறிப்பாக தொலைபேசி உரையாடல்கள், நேருக்கு நேர் சந்திப்புகள் மற்றும் வாடிக்கையாளர் விசாரணைகளில் பேச்சு ஆங்கிலத்தில் தெளிவு மற்றும் சரளமாகப் பேசுதல் ஆகியவற்றை மேம்படுத்துதல்.
- பொருத்தமான தொழில் தொனி மற்றும் வடிவமைப்பைப் பயன்படுத்தி, மின்னஞ்சல், குறி்ப்புகள் மற்றும் எளிய அறிக்கைகளை வரைதல் உள்ளிட்ட எழுத்துமூல தொடர்பாடல் திறன்களை வலுப்படுத்துதல்.
- வழக்கமான வங்கியியல் பணிகளில் தெளிவான மற்றும் பயனுறுதிவாய்ந்த தொடர்பாடலுக்கு ஆதரவளித்து, இலக்கணம் மற்றும் வாக்கிய கட்டமைப்புக்களில் துல்லியத்தன்மையை ஊக்குவித்தல்.
- சேவைகளை வழங்குதல், நடைமுறைகளை விளக்குதல் மற்றும் வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளைப் பூர்த்திசெய்தல் போன்ற பணியிட சந்தர்ப்பங்களை ஆங்கிலத்தில் கையாள்வதில் நம்பிக்கையை உருவாக்குதல்.
- சகல தொடர்புகளிலும் பணிவு, தொழில்முறை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை வலியுறுத்தி, வாடிக்கையாளர் நட்பு தொடர்பாடல் பாணியை வளர்த்தல்.
- கற்கைநெறியின் பெயர்: வங்கி ஊழியர்களுக்கான தொழில் ஆங்கிலம்
- காலம்: 25 மணித்தியாலங்கள்
- கற்கைநெறிக் கட்டணம்: ரூ.107,500.00 (முழுக் கற்கைநெறிக்கும், 30 பேர் வரையான குழுவிற்கு பொருந்தும்)
- கல்விசார் உத்தியோகத்தர்: எல்.எம். ரித்மா நிஷாதினி லன்சகார
- ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்: பீ. சிவா அஸ்வின்
- இலக்குக் குழு: வங்கி ஊழியர்கள் (குறிப்பாக இலங்கை வங்கியின் வேண்டுகோளுக்கிணங்க வடிவமைக்கப்பட்டது)
- முன்னைய தேவைகள்: ஆங்கிலத்தில் அடிப்படைத் தேர்ச்சி மற்றும் அவர்களின் அன்றாட வேலையில் பயன்படுத்தப்படும் பொதுவான வங்கியியல் சொற்களை நன்கு அறிந்திருத்தல்
இடைநிலை ஆங்கில கற்கைநெறி
அன்றாட, கல்விசார் மற்றும் பகுதியளவிலான தொழில்முறை சூழல்களில் சரளமாகப் பேசுதல், கேட்டல் மற்றும் வாய்மூலத் தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றது. இக் கற்கைநெறியானது செயன்முறை, ஊடாடும் நடவடிக்கைகள் மூலம் இலக்கணம், சொற்களஞ்சியம், உச்சரிப்பு மற்றும் கிரகித்தல் ஆகியவற்றை வலுப்படுத்துகின்றது. இது எழுத்து மற்றும் பேச்சுத் தேர்ச்சிகளை மேம்படுத்துவதற்கு தொகுத்தல், மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு ஆகியவற்றில் கற்பவர்களுக்கு ஆதரவளிக்கின்றது. பாடத்திட்டமானது இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியம், கிரகித்தல் மற்றும் தொகுத்தல் மற்றும் வாய்மூலத் தேர்ச்சி ஆகிய மூன்று மொடியூல்களை உள்ளடக்கியுள்ளது.
தேசிய தொழிற் தகைமை (NVQ) மட்டம் - 03
NVQ
இலங்கை தகைமை கட்டமைப்பு (SLQF) மட்டம் - 01
SLQF
மொடியூல்கள்
- ENGI 001: இடைநிலை இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியம்
- ENGI 002: இடைநிலை கிரகித்தல், தொகுத்தல் மற்றும் மொழிபெயர்ப்பு
- ENGI 003: இடைநிலை வாய்மூலத் தேர்ச்சி மற்றும் உரைபெயர்ப்பு
நோக்கங்கள்
- அன்றாட, கல்விசார் மற்றும் பகுதியளவிலான தொழில்முறை சூழல்களில் பயனுறுதிவாய்ந்த தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கு பேச்சு ஆங்கிலத்தில் கற்பவர்களின் சரளமாகப் பேசும் தன்மை மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துதல்.
- பல்வேறு வழக்கமான மற்றும் அறிமுகமில்லாத சந்தர்ப்பங்களில் துல்லியமான மற்றும் அர்த்தமுள்ள பேச்சை ஆதரவளிப்பதன்மூலம் இடைநிலை இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியத்தை வலியுறுத்துதல்.
- கேட்கும் மற்றும் புரிந்துகொள்ளும் திறன்களை மேம்படுத்துவதற்கு, பேச்சு ஆங்கில உரையாடல்கள், அறிவுறுத்தல்கள் மற்றும் குறுகிய பேச்சுகள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு பொருத்தமாக பதிலளிப்பதற்கு கற்பவர்களை அனுமதித்தல்.
- பொழிப்புரை, சுருக்கம் மற்றும் வினாக்களுக்கு தெளிவு மற்றும் ஒத்திசைவுடன் பதிலளித்தல் ஆகியவை உள்ளிட்ட வாய்மூல உரைபெயர்ப்பு மற்றும் வெளிப்பாட்டு திறன்களை விருத்திசெய்தல்.
- குறிப்பாக ஆங்கிலம் மற்றும் தாய்மொழிக்கிடையில் குறுகிய உரைகளை எழுதுதல் மற்றும் உரைபெயர்த்தல் ஆகியவற்றில் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு தொகுத்தல் மற்றும் மொழிபெயர்ப்பு ஆற்றல்களின் விருத்திக்கு ஆதரவளித்தல்.
- கற்பவர்களின் அன்றாட மற்றும் கல்விசார் தொடர்புகளுக்கான பேச்சு ஆங்கிலத்தை தெளிவாகவும் மற்றும் இயல்பாகவும் மாற்றுவதற்கு உச்சரிப்பு, அழுத்தம் மற்றும் குரலேற்றத்தாழ்வுகளை செம்மைப்படுத்தல்.
- உரையாடல்கள், குழு விவாதங்கள், முன்வைத்தல் மற்றும் வகிபாகம் ஏற்று நடித்தல் போன்ற ஊடாடும் பணிகளினூடாக செயன்முறை மொழிப் பயன்பாட்டை ஊக்குவித்தல்.
- கற்கைநெறியின் பெயர்: இடைநிலை ஆங்கில கற்கைநெறி
- காலம்: 150 மணித்தியாலங்கள்
- கற்கைநெறிக் கட்டணம்: ரூ.18,000.00
- கல்விசார் உத்தியோகத்தர்: எல்.எம். ரித்மா நிஷாதினி லன்சகார
- ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்: பீ. சிவா அஸ்வின்
- இலக்குக் குழு: க.பொ.த. சாதாரண தரப் (சா/த) பரீட்சையைப் பூர்த்திசெய்தவர்கள் மற்றும் இந் நிகழ்ச்சித்திட்டத்தை தொடர ஆர்வமுள்ளவர்கள்
- முன்னைய தேவைகள்: எளிய வாக்கியங்களை உருவாக்குவதற்கான திறன் மற்றும் ஆங்கிலத்தை நன்றாகப் புரிந்துகொள்வதற்கான திறன்
ஆங்கில மொழியில் உயர்தர கற்கைநெறி
இக் கற்கைநெறியானது கல்விசார், தொழில்முறை மற்றும் சமூக சூழ்நிலைகளுக்கான உயர்தர பேச்சு, கேட்டல், வாசிப்பு மற்றும் எழுதும் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இலக்கணத்தை செம்மைப்படுத்துதல், சொற்களஞ்சியத்தை விரிவுபடுத்துதல் மற்றும் உரையாடல் மற்றும் பொதுவிடப் பேச்சில் சரளமாகப் பேசுவதை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகின்றது. கற்பவர்கள் இயற்கையான உச்சரிப்பு மற்றும் நம்பிக்கையான வாய்மூல வழங்கல் ஆகியவற்றின் மூலம் உயர்தர தொகுத்தல் மற்றும் மொழிபெயர்ப்பு திறன்களையும் விருத்திசெய்கிறார்கள். இக் கற்கைநெறியானது இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியம், கிரகித்தல் மற்றும் மொழிபெயர்ப்பு மற்றும் வாய்மூலத் தேர்ச்சி மற்றும் உரைபெயர்ப்பு ஆகிய மூன்று மொடியூல்களை உள்ளடக்கியுள்ளது.
தேசிய தொழிற் தகைமை (NVQ) மட்டம் - 04
NVQ
இலங்கை தகைமை கட்டமைப்பு (SLQF) மட்டம் - 02
SLQF
மொடியூல்கள்
- ENGA 001: உயர்தர இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியம்
- ENGA 002: உயர்தர கிரகித்தல், தொகுத்தல் மற்றும் மொழிபெயர்ப்பு
- ENGA 003: உயர்தர வாய்மூலத் தேர்ச்சி மற்றும் உரைபெயர்ப்பு
நோக்கங்கள்
- கற்பவர்களுக்கு சிக்கலான கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும், முழுமையான விவாதங்களில் ஈடுபடவும் மற்றும் நம்பிக்கையுடன் வாதங்களை முன்வைக்கவும் உதவுவதற்கு உயர்தர பேச்சு தொடர்பாடல் திறன்களை வலுப்படுத்துதல்.
- முறையான மற்றும் முறைசாரா சூழல்களில் துல்லியமான மற்றும் நுணுக்கமான வெளிப்பாட்டை ஆதரிப்பதன் மூலம் உயர்தர இலக்கணம் மற்றும் பரந்த சொற்களஞ்சியத்தின் பயன்பாட்டினை செம்மைப்படுத்துதல்.
- பேச்சுக்கள், பத்திரிகை அறிக்கைகள், கட்டுரைகள் மற்றும் கல்விசார் அல்லது தொழில்முறை பொருட்கள் உள்ளிட்ட பேச்சு மற்றும் எழுதப்பட்ட உரைகளில் கிரகித்தலை மேம்படுத்துதல்.
- வாய்மூல உரைபெயர்ப்பு மற்றும் பதிலளிப்பதில் சரளமான பேசுவதை விருத்திசெய்வதற்கு உரையாடல் மற்றும் பொதுவிட பேச்சில் தன்னிச்சையான தன்மை, ஒத்திசைவு மற்றும் தெளிவு ஆகியவற்றில் கவனம் செலுத்துதல்.
- எழுத்துமூல தொகுத்தல் மற்றும் மொழிபெயர்ப்புத் திறன்களை மேம்படுவதற்கு கற்பவர்கள் கட்டமைக்கப்பட்ட உரைகளை உருவாக்குவதற்கும், தொனி, பாணி மற்றும் சூழலுக்கேற்ப உணர்திறனுடன் மொழிபெயர்க்கவும் உதவுதல்.
- இயற்கையான உச்சரிப்பு, தாளம் மற்றும் உள்ளுணர்வை ஊக்குவிப்பதற்கு புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் நம்பிக்கையான வாய்மூல வழங்கலுக்கு பங்களிப்பு செய்தல்.
- விவாதங்கள், முன்வைத்தல்கள், நேர்காணல்கள் மற்றும் உருவகப்படுத்துதல்கள் போன்ற உயர்தர ஊடாடும் நடவடிக்கைகள் மூலம் சுயாதீன மற்றும் சூழல் சார்ந்த மொழிப் பயன்பாட்டை ஊக்குவித்தல்.
- கற்கைநெறியின் பெயர்: ஆங்கில மொழியில் உயர்தர கற்கைநெறி
- காலம்: 200 மணித்தியாலங்கள்
- கற்கைநெறிக் கட்டணம்: ரூ.24,000.00
- கல்விசார் உத்தியோகத்தர்: எல்.எம். ரித்மா நிஷாதினி லன்சகார
- ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்: பீ. சிவா அஸ்வின்
- இலக்குக் குழு: க.பொ.த. சாதாரண தரப் (சா/த) பரீட்சையைப் பூர்த்திசெய்தவர்கள் மற்றும் இந் நிகழ்ச்சித்திட்டத்தை தொடர ஆர்வமுள்ளவர்கள்
- முன்னைய தேவைகள்: 1500 சொற்களின் சொற்களஞ்சிய வரம்பிற்குள், மிகவும் சிக்கலான கட்டமைப்புக்களைப் புரிந்துகொள்ளும் மற்றும் உரையாடும் ஆற்றல்
ஹிந்தி மொழியில் சான்றிதழ் கற்கைநெறி
இக் கற்கைநெறியானது அன்றாட தொடர்பாடல்களுக்கான கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுதுதல் ஆகிய ஆற்றல்களை விருத்திசெய்வதில் கவனம் செலுத்துகிறது. இக் கற்கைநெறியானது இலக்கண மற்றும் சொற்களஞ்சிய செயன்முறைப் பயன்பாட்டை வலியுறுத்துவதோடு, ஹிந்தி, சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளுக்கிடையில் அடிப்படை அமைப்பு மற்றும் மொழிபெயர்ப்பு திறன்களையும் வலியுறுத்துகின்றது. ஹிந்தி பேசும் சூழல்களிலுள்ள சூழல் மற்றும் சமூக விதிமுறைகளைப் புரிந்துகொள்வதற்கு கற்பவர்களுக்கு உதவும் வகையில் கலாசார அம்சங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
தேசிய தொழிற் தகைமை (NVQ) மட்டம் - 03
NVQ
இலங்கை தகைமை கட்டமைப்பு (SLQF) மட்டம் - 01
SLQF
மொடியூல்கள்
- HINC 001: அடிப்படை இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியம்
- HINC 002: கிரகித்தல், தொகுப்பு மற்றும் மொழிபெயர்ப்பு
- HINC 003: வாய்மூலத் தேர்ச்சி மற்றும் உரைபெயர்ப்பு
நோக்கங்கள்
- அன்றாட சூழல்களில் செயன்முறைப் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து, கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுதுதல் போன்ற ஹிந்தி மொழித் திறன்களில் அடிப்படைத் தேர்ச்சியை விருத்திசெய்தல்.
- ஹிந்தி மொழியில் பயனுறுதிவாய்ந்த தொடர்பாடலுக்கான அத்தியாவசியமாக அடிப்படை இலக்கண கட்டமைப்புக்கள் மற்றும் சொற்களஞ்சியத்தின் புரிதலையும் சரியான விண்ணப்பித்தலையும் மேம்படுத்துதல்.
- கற்பவர்கள் ஹிந்தி மொழியில் எளிமையாக எழுதப்பட்ட மற்றும் வாய்மூல உரைகளைப் புரிந்துகொள்ளவும், வாய்மூல மற்றும் எழுத்து வழிமுறைகள் மூலம் அவற்றுக்குப் பொருத்தமான முறையில் பதிலளிக்கவும் உதவுதல்.
- தெளிவான வாக்கிய அமைப்புகளையும் பொருத்தமான சொற்களஞ்சியத்தையும் பயன்படுத்தி ஹிந்தியில் குறுகிய பந்திகள், கடிதங்கள் மற்றும் விளக்கமான பகுதிகளை உருவாக்கும் திறனை வளர்த்தல்.
- இரு மொழிகளின் இலக்கண ஒருமைப்பாட்டைப் பேணுவதன் மூலம் பொருளைத் துல்லியமாக வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தி, சிங்களம்/ஆங்கில மொழிகளிலிருந்து ஹிந்திக்கும் மற்றும் அதற்கு எதிர்மாறாகவும் அடிப்படை மொழிபெயர்ப்பில் திறன்களை வளர்த்தல்.
- ஊடாடும் மற்றும் விளக்கப் பயிற்சிகள் மூலம் சரியான உச்சரிப்பு, வாக்கிய உருவாக்கம் மற்றும் சரளமாகப் பேசுதல் உள்ளிட்ட வாய்மூலத் தொடர்பாடல் திறன்களை வளர்த்தல்.
- மொழிப் பயன்பாடு, வெளிப்பாடுகள் மற்றும் தொடர்பாடலில் சமூக விதிமுறைகளைத் தெரிவிக்கும் ஹிந்தி பேசும் உலகின் கலாச்சார அம்சங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.
- வாழ்த்துகள், அறிமுகங்கள், கேட்பது மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவது, கருத்துக்கள் மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது போன்ற ஹிந்தியில் அன்றாட தொடர்புகளுக்கு கற்பவர்களை தயார்படுத்துதல்.
- கற்கைநெறியின் பெயர்: ஹிந்தி மொழியில் சான்றிதழ் கற்கைநெறி
- காலம்: 120 மணித்தியாலங்கள்
- கற்கைநெறிக் கட்டணம்: ரூ.33,500.00
- கல்விசார் உத்தியோகத்தர்: எல்.எம். ரித்மா நிஷாதினி லன்சகார
- ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்: பீ. சிவா அஸ்வின்
- இலக்குக் குழு: சாதாரண தரப் (சா/த) பரீட்சையைப் பூர்த்திசெய்தவர்கள் மற்றும் இந் நிகழ்ச்சித்திட்டத்தை தொடர ஆர்வமுள்ளவர்கள்
கொரிய மொழியில் சான்றிதழ் கற்கைநெறி
இக்கற்கைநெறியானது அன்றாட மற்றும் பணியிட அமைப்புகளுக்குக் கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுதுதல் போன்ற செயன்முறை தொடர்பாடல்களில் கவனம் செலுத்துகின்றது. வேலைவாய்ப்பு தொடர்பான மொழிப் பயன்பாடு குறித்த குறிப்பிட்ட பயிற்சியுடன், EPS–TOPIK பரீட்சைக்கு கற்பவர்களைத் தயார்படுத்துகிறது. பயனுள்ள மற்றும் சூழல் விழிப்புணர்வுள்ள தொடர்பாடலுக்கு ஆதரவளிக்க, சமூக விதிமுறைகள், ஆசாரம் மற்றும் வாழ்க்கை முறை உள்ளிட்ட கொரிய கலாச்சார புரிதலை இக்கற்கைநெறி ஒருங்கிணைக்கின்றது. முக்கிய மொடியூல்கள் வாய்மூலத் தேர்ச்சியை உள்ளடக்குகின்றன.
தேசிய தொழிற் தகைமை (NVQ) மட்டம் - 03
NVQ
இலங்கை தகைமை கட்டமைப்பு (SLQF) மட்டம் - 01
SLQF
மொடியூல்கள்
- KORC 001: வாய்மூலத் தேர்ச்சி மற்றும் தொடர்பாடல் திறன்கள்
- KORC 002: அடிப்படை இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியம்
- KORC 003: கலாச்சாரம் மற்றும் சமகால வாழ்க்கைமுறை
- KORC 004: வேலைவாய்ப்பு அனுமதி முறைக்கான கொரிய மொழி (EPS–TOPIK)
நோக்கங்கள்
- நிஜ வாழ்க்கை மற்றும் பணியிட தொடர்பாடல்களில் கவனம் செலுத்தி, கொரிய மொழியில் கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுதுதல் ஆகியவற்றில் அடிப்படைத் திறன்களைக் கொண்ட கற்பவர்களை ஆய்த்தப்படுத்தல்.
- பழக்கமான சூழல்களில் பயனுள்ள மற்றும் துல்லியமான தொடர்பாடலுக்கு அத்தியாவசிய இலக்கண கட்டமைப்புகள் மற்றும் சொற்களஞ்சியத்தைப் பயன்படுத்தும் திறனை வளர்த்தல்.
- வாய்மூலம் சரளமாகப் பேசுவதையும் புரிந்துகொள்வதையும் வளர்ப்பதற்கு, கற்பவர்கள் எளிய உரையாடல்களில் நம்பிக்கையுடன் பங்கேற்கவும், கேள்விகளைக் கேட்கவும் பதிலளிக்கவும், கொரிய மொழியில் தனிப்பட்ட தகவல்கள், தேவைகள் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தவும் உதவுதல்.
- தொடர்பாடலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற வாழ்க்கை முறை நடைமுறைகள், மதிப்புகள், பழக்கவழக்கங்கள் மற்றும் ஒழுங்குமுறை ஆகியவை உட்பட கொரிய சமூகத்தின் சமூக மற்றும் கலாச்சார விதிமுறைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.
- பணியிட அறிவுறுத்தல்கள், பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் அன்றாட வழக்கங்கள் உள்ளிட்ட வேலைவாய்ப்பு சூழ்நிலைகளுக்குப் பொருத்தமான இலக்கு மொழிப் பயிற்சியை வழங்குவதன் மூலம் EPS–TOPIK பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்துதல்.
- கொரியாவில் வேலைவாய்ப்பு, பயணம் மற்றும் அன்றாட தொடர்புகளின் தகவல்தொடர்பு கோரிக்கைகளுடன் இணைந்த செயல்பாட்டு மொழித்திறன்களை வளர்ப்பதில் கற்பவர்களுக்கு ஆதரவளித்தல்.
- கற்கைநெறியின் பெயர்: கொரிய மொழியில் சான்றிதழ் கற்கைநெறி
- காலம்: 120 மணித்தியாலங்கள்
- கற்கைநெறிக் கட்டணம்: ரூ.33,500.00
- கல்விசார் உத்தியோகத்தர்: எல்.எம். ரித்மா நிஷாதினி லன்சகார
- ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்: லவங்கி குமாரி வீபெத்த
- இலக்குக் குழு: க.பொ.த சாதாரண தரப் (சா/த) பரீட்சையைப் பூர்த்திசெய்தவர்கள் மற்றும் இந் நிகழ்ச்சித்திட்டத்தை தொடர ஆர்வமுள்ளவர்கள்
ஜப்பானிய மொழியில் சான்றிதழ் கற்கைநெறி
இக் கற்கைநெறி, அன்றாட மற்றும் தொழில்முறை சூழல்களுக்கு ஏற்றவாறு கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுதுதல் ஆகியவற்றில் மொழித்திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. இது இலக்கணம், சொற்களஞ்சியம் மற்றும் புரிந்துகொள்ளும் திறன்களை வலியுறுத்துகிறது, அடிப்படை வணிக தொடர்பு மற்றும் கலாச்சார புரிதலுக்கு கற்பவர்களை தயார்படுத்துகிறது. இக் கற்கைநெறி மொழிப் பயன்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒழுக்கமுறை மற்றும் சமூக விதிமுறைகள் ஆகியவை உள்ளிட்ட ஜப்பானிய சமூகத்தின் முக்கிய கலாச்சார அம்சங்களையும் அறிமுகப்படுத்துகிறது. முக்கிய மொடியூல்கள் மொழித் தேர்ச்சி, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை, தொகுத்தல் மற்றும் தொழில் உரையாடல் திறன்களை உள்ளடக்குகின்றன.
தேசிய தொழிற் தகைமை (NVQ) மட்டம் - 03
NVQ
இலங்கை தகைமை கட்டமைப்பு (SLQF) மட்டம் - 01
SLQF
மொடியூல்கள்
- JAPC 001: மொழித் தேர்ச்சி, தொடர்பாடல் திறன்கள்
- JAPC 002: ஜப்பானிய கலாச்சாரம் மற்றும் வாழ்க்கைமுறை
- JAPC 003: கிரகித்தல், தொகுப்பு மற்றும் மொழிபெயர்ப்பு
- JAPC 004: தொழில் உரையாடல் மற்றும் அடிப்படை உரைபெயர்ப்பு திறன்கள்
நோக்கங்கள்
- செயன்முறை மற்றும் தொழில்முறை சூழல்களுக்கான கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுதுதல் ஆகியவற்றின் மீது முக்கியத்துவம் அளித்து ஜப்பானிய மொழியில் அடிப்படைத் தேர்ச்சியை உருவாக்குதல்.
- ஜப்பானிய மொழியில் தெளிவான மற்றும் பயனுள்ள தகவல்தொடர்பு திறன்களை வளர்த்தல், கற்பவர்கள் அன்றாட தொடர்புகளையும் அடிப்படை பணியிட உரையாடல்களையும் கையாள உதவுதல்.
- அத்தியாவசிய இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியத்தை அறிமுகப்படுத்துதல், மேலும் எழுத்து மற்றும் பேச்சுத் தொடர்பு இரண்டிலும் அவற்றின் சரியான பயன்பாட்டை உறுதிசெய்வதற்கு போதுமான பயிற்சியை வழங்குதல்.
- எளிய ஜப்பானிய உரைகள் மற்றும் ஒலி சாதனங்களை வெளிப்படுத்துவதன் மூலம் புரிந்துகொள்ளும் திறன்களை வளர்ப்பதற்கும், பல்வேறு சூழ்நிலைகளில் கற்பவர்கள் சரியான முறையில் மற்றும் துல்லியமாக பதிலளிக்கவும் உதவுதல்.
- ஜப்பானிய கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை பற்றி நுண்ணறிவுகளை வழங்குதல், மொழிப் பயன்பாடு மற்றும் நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் கலாச்சார நடைமுறைகள், மதிப்புகள், ஒழுங்குமுறை மற்றும் சமூக விதிமுறைகளைப் புரிந்துகொள்ள கற்பவர்களுக்கு உதவுதல்.
- முறையான மொழி (கீகோ), பொருத்தமான வணிக வாழ்த்துகள் மற்றும் அத்தியாவசிய பணியிட ஒழுங்குமுறை ஆகியவை உள்ளிட்ட ஜப்பானிய மொழியில் அடிப்படை வணிகத் தொடர்பாடலுக்கு மாணவர்களைத் தயார்படுத்துதல்.
- ஜப்பானிய மொழி பேசும் சூழல்களுக்குள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தொடர்புகளில் கற்பவர்கள் அர்த்தமுள்ள வகையில் ஈடுபட உதவும் வகையில், கலாச்சாரங்களுக்கிடையிலான திறன் மற்றும் நம்பிக்கையை ஊக்குவித்தல்.
- கற்கைநெறியின் பெயர்: ஜப்பானிய மொழியில் சான்றிதழ் கற்கைநெறி
- காலம்: 120 மணித்தியாலங்கள்
- கற்கைநெறிக் கட்டணம்: ரூ.33,500.00
- கல்விசார் உத்தியோகத்தர்: எல்.எம். ரித்மா நிஷாதினி லன்சகார
- ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்: ஹிரோஷிமா பெரேரா
- இலக்குக் குழு: க.பொ.த சாதாரண தரப் (சா/த) பரீட்சையைப் பூர்த்திசெய்தவர்கள் மற்றும் இந் நிகழ்ச்சித்திட்டத்தை தொடர ஆர்வமுள்ளவர்கள்
பிரெஞ்சு மொழியில் சான்றிதழ் கற்கைநெறி
இது கிரகித்தல், சொற்களஞ்சியம், இலக்கணம் மற்றும் வாய்மொழிமூல தொடர்பாடல் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, கற்பவர்களை அடிப்படை உரையாடல்களில் நம்பிக்கையுடன் ஈடுபடுவதற்கு அனுமதிக்கிறது. சமூக பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறை, கலாச்சார உணர்திறனை வளர்ப்பது உள்ளிட்ட பிரெஞ்சுமொழிக் கலாச்சாரத்தையும் இக்கற்கைநெறி அறிமுகப்படுத்துகிறது. ஊடாடும் செயல்பாடுகள் மூலம் செயன்முறை பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதுடன் முக்கிய மொடியுல்கள் மொழித் தேர்ச்சி, கிரகித்தல், வெளிப்பாடு மற்றும் வாய்மூல தொடர்பாடல் திறன்களை உள்ளடக்குகிறது.
தேசிய தொழிற் தகைமை (NVQ) மட்டம் - 03
NVQ
இலங்கை தகைமை கட்டமைப்பு (SLQF) மட்டம் - 01
SLQF
மொடியூல்கள்
- FREC 001: மொழி, கிரகித்தல் மற்றும் வெளிப்பாடு
- FREC 002: வாய்மூல தொடர்பாடல் மற்றும் கலாச்சாரம்
நோக்கங்கள்
- அன்றாட மற்றும் செயன்முறை பயன்பாட்டிற்காக கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுதுதல் போன்றவற்றில் கவனம் செலுத்தி பிரெஞ்சு மொழியில் அடிப்படை திறன்களை வளர்த்தல்.
- பழக்கமான சமூக மற்றும் தொடர்பாடல் சூழ்நிலைகளில் எளிமையான பேச்சு மற்றும் எழுத்து பிரெஞ்சு மொழியைப் புரிந்துகொள்வதற்கும் துல்லியமாக பதிலளிப்பதற்கும் கற்பவர்களின் திறனை மேம்படுத்துதல்.
- வாய்மொழி மற்றும் எழுத்து வடிவங்களில் தெளிவாகவும் திறம்படவும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குத் தேவையான அத்தியவசியமான சொற்களஞ்சியம் மற்றும் இலக்கண அமைப்புகளை உருவாக்குதல்.
- வாய்மொழி மூல தொடர்பாடல் திறன்களை வலுப்படுத்துவதற்கு, அடிப்படை உரையாடல்களில் பங்கேற்பதற்கும், கேள்விகளைக் கேட்டு பதிலளிக்கவும், தனிப்பட்ட தகவல்களை நம்பிக்கையுடன் தெரிவிக்கவும் கற்பவர்களை செயல்படுத்துதல்.
- துல்லியமான உச்சரிப்பு மற்றும் உள்ளுணர்வை ஊக்குவிக்க, கற்பவர்களுக்கு இயற்கையான மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய பிரெஞ்சு மொழியை வளர்க்க உதவுதல்.
- தொடர்பாடலில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை மற்றும் கலாச்சார வெளிப்பாடுகள் உட்பட பிரெஞ்சு மொழிக் கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்களை கற்பவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.
- கலாச்சார உணர்திறன் மற்றும் பாராட்டுக்களை வளர்ப்பதற்கு, மாணவர்கள் பிரெஞ்சு மொழி பேசும் தனிநபர்கள் மற்றும் சமூகங்களுடன் மரியாதையுடனும் திறம்படவும் ஈடுபடுவதற்கு உதவுதல்.
- ஊடாடும் செயல்பாடுகள், உரையாடல்கள், வகிபாகம் ஏற்று நடித்தல் மற்றும் கலாச்சார ரீதியாக பொருத்தமான சூழ்நிலைகள் மூலம் மொழித் திறன்களின் செயன்முறை பயன்பாட்டை ஊக்குவித்தல்.
- கற்கைநெறியின் பெயர்: பிரெஞ்சு மொழியில் சான்றிதழ் கற்கைநெறி
- காலம்: 120 மணித்தியாலங்கள்
- கற்கைநெறிக் கட்டணம்: ரூ.33,500.00
- கல்விசார் உத்தியோகத்தர்: எல்.எம். ரித்மா நிஷாதினி லன்சகார
- ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்: ரீ. கல்யாணி
- இலக்குக் குழு: க.பொ.த சாதாரண தரப் (சா/த) பரீட்சையைப் பூர்த்திசெய்தவர்கள் மற்றும் இந் நிகழ்ச்சித்திட்டத்தை தொடர ஆர்வமுள்ளவர்கள்
ரஷ்ய மொழியில் சான்றிதழ் கற்கைநெறி
இக் கற்கைநெறி, அன்றாட மற்றும் தொழில்முறை சூழல்களுக்கு ஏற்றவாறு கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுதுதல் ஆகியவற்றில் திறமையை விருத்திசெய்வதில் கவனம் செலுத்துகிறது. இக் கற்கைநெறி கலாச்சார உணர்திறன் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையேயான திறனை வளர்க்கின்ற ரஷ்ய கலாச்சாரம், மரபுகள் மற்றும் நவீன வாழ்க்கை முறைகளையும் அறிமுகப்படுத்துகிறது. முக்கிய மொடியூல்கள் கல்வி மற்றும் தொழில்முறை அமைப்புகளில் சொல்லகராதி, இலக்கணம், வாய்மூலத் தேர்ச்சி மற்றும் மொழிப்பயன்பாடு ஆகியவற்றை உள்ளடக்குகிறது.
தேசிய தொழிற் தகைமை (NVQ) மட்டம் - 03
NVQ
இலங்கை தகைமை கட்டமைப்பு (SLQF) மட்டம் - 01
SLQF
மொடியூல்கள்
- RUSC 001: சொற்களஞ்சியம் மற்றும் அடிப்படை இலக்கணம்
- RUSC 002: வாய்மூலத் தேர்ச்சி மற்றும் தொடர்பாடல் திறன்கள்
- RUSC 003: கலாச்சாரம் மற்றும் சமகால வாழ்க்கைமுறைகள்
- RUSC 004: தொழில்முறை மற்றும் கல்வி நோக்கங்களுக்கான ரஷ்ய மொழி
நோக்கங்கள்
- அன்றாட வாழ்க்கை மற்றும் கல்வி/தொழில்முறை பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து, கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுதுதல் போன்ற ரஷ்ய மொழித் திறன்களில் அடிப்படைத் தேர்ச்சியை வளர்த்தல்.
- கற்பவர்கள் ரஷ்ய மொழியில் எளிமையான, அர்த்தமுள்ள வாக்கியங்களை உருவாக்க உதவும் வகையில், முக்கிய சொற்களஞ்சியம் மற்றும் அடிப்படை இலக்கண கட்டமைப்புகளை அறிமுகப்படுத்தி வலுப்படுத்துதல்.
- வாய்மூலத் தொடர்பாடல் திறன்களை மேம்படுத்த, வாழ்த்துக்கள், அறிமுகங்கள், கோரிக்கைகள் மற்றும் அன்றாட தொடர்புகள் போன்ற பொதுவான உரையாடல் சூழ்நிலைகளில் ஈடுபட கற்பவர்களுக்கு உதவுதல்.
- பயனுள்ள வாய்மூல வெளிப்பாட்டிற்காக கட்டமைக்கப்பட்ட பேச்சுப் பயிற்சி, சரளமாகப் பேசுதல், உச்சரிப்பு மற்றும் உள்ளுணர்வை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குதல்.
- பேசும் மற்றும் எழுதப்பட்ட ரஷ்ய மொழியைப் புரிந்துகொள்வதை அதிகரிக்க, கற்பவர்கள் அன்றாட வாழ்க்கை மற்றும் கல்வி அமைப்புகள் தொடர்பான எளிய உரைகள், அறிவுறுத்தல்கள் மற்றும் உரையாடல்களைப் புரிந்துகொள்ள உதவுதல்.
- ரஷ்ய கலாச்சாரம், மரபுகள் மற்றும் நவீன வாழ்க்கை முறைகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குவதற்கு, மொழிப் பயன்பாட்டில் கலாச்சார சூழலைப் பற்றிய பாராட்டை வளர்த்தல்.
- கலாச்சாரங்களுக்கிடையேயான திறனை மேம்படுத்துவதற்கு, ரஷ்ய மொழி பேசும் சூழல்களில் கற்பவர்களை சரியான முறையில் மற்றும் மரியாதையுடன் தொடர்புகொள்ள தயார்படுத்துதல்.
- முறையான வெளிப்பாடுகள், சொற்களஞ்சியம் மற்றும் மின்னஞ்சல்கள், அறிக்கைகள் எழுதுதல் மற்றும் அடிப்படை தொழில்முறை உரையாடலில் பங்கேற்பது போன்ற பொதுவான தகவல்தொடர்பு பணிகள் உட்பட கல்வி மற்றும் தொழில்முறை சூழல்களுக்கு பொருத்தமான மொழித் திறன்களை வளர்த்தல்.
- பயணம், வேலை, படிப்பு அல்லது கலாச்சார பரிமாற்றம் என எதுவாகயிருந்தாலும், ரஷ்ய மொழியை நிஜ உலகில் பயன்படுத்துவதற்கான நம்பிக்கையை கற்பவர்களிடம் வளர்த்தல்.
- கற்கைநெறியின் பெயர்: ரஷ்ய மொழியில் சான்றிதழ் கற்கைநெறி
- காலம்: 120 மணித்தியாலங்கள்
- கற்கைநெறிக் கட்டணம்: ரூ.33,500.00
- கல்விசார் உத்தியோகத்தர்: எல்.எம். ரித்மா நிஷாதினி லன்சகார
- ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்: ஹிரோஷிமா பெரேரா
- இலக்குக் குழு: க.பொ.த சாதாரண தரப் (சா/த) பரீட்சையைப் பூர்த்திசெய்தவர்கள் மற்றும் இந் நிகழ்ச்சித்திட்டத்தை தொடர ஆர்வமுள்ளவர்கள்
செயன்முறை தமிழ் மற்றும் சிங்களத்தில் சான்றிதழ் கற்கைநெறி (பேச்சுத்திறன்)
பன்மொழிச் சமூகத்தில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் பயனுள்ள தொடர்பாடலானது மிக முக்கியமானதாகும். பேச்சுக் கலை கற்கைநெறியானது தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தினால் நடைமுறை மொழித் திறன்கள் மற்றும் கலாச்சார விழிப்புணர்வை மாணவர்களுக்கு வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு புரட்சிகரமான முயற்சியாகும். இக் கற்கைநெறி இலங்கையின் பன்முகத்தன்மை கொண்ட மொழியியல் நிலப்பரப்பில் தனிப்பட்ட, கல்விசார் மற்றும் தொழில்முறை வெற்றிக்கான பாதையைத் திறக்கிறது. இலங்கை போன்ற ஒரு நாட்டில் நன்கு தொடர்புகொள்ள முடிந்ததன் மூலம் உங்கள் தொழிலில் வெற்றியடையுங்கள்
மட்டம் 03
NVQ
மட்டம் 01
SLQF
மொடியூல்
- Module 1: கேட்டல் மற்றும் பேசுதல் பயிற்சி
- Module 2: வாசிப்பு கிரகித்தல் நுட்பங்கள்
- Module 3: அன்றாடப் பயன்பாட்டிற்கான எழுதும் திறன்கள்
- Module 4: பொதுவிடப் பேச்சு மற்றும் முன்வைத்தல் திறன்கள்
- Module 5: மொழி மற்றும் கலாச்சார விழிப்புணர்வ
- Module 6: செயன்முறை பயிற்சிப்பட்டறை மற்றும் நிஜ வாழ்க்கை காட்சிகள்
நோக்கங்கள்
- தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் செயன்முறைப் பேச்சு, கேட்டல், வாசித்தல் மற்றும் எழுதுதல் போன்ற திறன்களை வளர்த்துக்கொள்ளுதல் .
- கல்விசார், சமூக மற்றும் பணியிட சூழல்களில் நம்பிக்கையுடன் தொடர்புகொள்வதற்கு கற்பவர்களுக்கு பயிற்சியளித்தல்.
- உரையாடல்கள், உரைகள், கதைசொல்லல் மற்றும் முன்வைப்புக்களை செவிமடுப்பதன் மூலம் பொதுப் பேச்சுத் திறன்களை விருத்திசெய்தல் .
- தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் இலக்கண உச்சரிப்பு மற்றும் சரளமாகப் பேசுதல் ஆகியவற்றை வலுப்படுத்துதல் .
- இக் கற்கைநெறி மாணவர்களை வலுவான தகவல் தொடர்பாடல் திறன்களுடன் ஆய்த்தப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பண்டிகைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் உணவு போன்ற மொழியியல் மற்றும் கலாச்சார ஒற்றுமைகளை ஆராய்வதன் மூலம் பன்முக கலாச்சார புரிதலை வளர்த்தல்.
- கற்கைநெறியின் பெயர் : செயன்முறை தமிழ் மற்றும் சிங்களத்தில் சான்றிதழ் கற்கைநெறி (பேச்சுத்திறன்)
- காலம் : 400 மணித்தியாலங்கள்
- கற்கைநெறிக் கட்டணம் : ரூ.12500.00
- கல்விசார் உத்தியோகத்தர் : பாலரஞ்சனி ஜெகநாதன்
- ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்: டிலான் ரணசிங்க
- இலக்குக் குழு : சாதாரண தரத்திற்குப் பின், உயர் தரத்திற்குப் பின், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்
ஜப்பானிய மொழிச் சான்றிதழ் கற்கைநெறி
இக் கற்கைநெறி தொடர்பாடல், கலாச்சாரம் மற்றும் தொழில்முறை பயன்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டு செயல்முறை ஜப்பானிய மொழித் திறன்களை வழங்குகின்றது. மொழி வினைத்திறன், கலாச்சாரம், கிரகித்தல் மற்றும் மொழிபெயர்ப்பு மற்றும் தொழில் கலந்துரையாடல் ஆகிய முக்கிய நான்கு மொடியூல்களைக் கொண்டுள்ளதுடன், ஜப்பானிய மொழிபேசும் சூழலில் கல்விசார் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் ஆகிய இரண்டிற்கும் கற்பவர்களைத் தயார்படுத்துகின்றது.
மட்டம்
–
மட்டம்
–
மொடியூல்கள்
- JAPN 001: மொழித் தேர்ச்சி , தொடர்பாடல் திறன்கள்
- JAPN 002: ஜப்பானிய கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை
- JAPN 003: கிரகித்தல் , தொகுத்தல் மற்றும் மொழிபெயர்ப்பு
- JAPN 004: தொழில் கலந்துரையாடல் மற்றும் அடிப்படை உரைபெயர்ப்புத் திறன்கள்
நோக்கங்கள்
- கேட்கும் மற்றும் பேசும் திறனை மேம்படுத்துவதன் மூலம் கற்பவர்களின் தொடர்பாடல் திறன்களை அபிவிருத்திசெய்தல்
- நிஜ வாழ்க்கை சந்தர்ப்பங்களில் இலக்கு மொழியில் தொடர்புகொள்வதற்கு கற்பவர்களின் திறனை வளர்த்தல்.
- தகவல்தொடர்பு அணுகுமுறையில் அகராதி மற்றும் இலக்கணத்தைக் கற்றுக்கொள்ளல்.
- அடிப்படை பயனரின் திறனை நிரூபித்தல் (ஜப்பானிய அறக்கட்டளை தரநிலையின் மட்டம் 1 / CEFR)
- பழக்கமான அன்றாட வெளிப்படுத்தல்கள் மற்றும் மிக அடிப்படையான சொற்றொடர்களைப் புரிந்துகொண்டு பயன்படுத்துதல்.
- உறுதியான வகையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்தல்
- தன்னையும் மற்றவர்களையும் அறிமுகப்படுத்திக்கொள்ளுதல்
- தனிப்பட்ட விபரங்கள் பற்றி கேள்விகளைக் கேட்டு விடையளித்தல் (உதா. ஒருவர் எங்கு வசிக்கிறார், அவருக்கு தெரிந்தவர்கள், அவரிடம் இருக்கும் பொருட்கள்)
- மற்றவர் மெதுவாக மற்றும் தெளிவாக பேசி உதவ தயாராக இருந்தால், எளிமையான முறையில் தொடர்புகொள்ளவும்
- காலம் : 03 மாதங்கள்
- கற்கைநெறிக் கட்டணம் : ரூ.7000.00
- கல்விசார் உத்தியோகத்தர் : ஆர்.ஹேவாசிங்க
- இலக்குக் குழு : முச்சக்கரவண்டி சாரதிகள் / பொதுமக்கள்
தொடர்பாடல் ஆங்கிலக் கற்கைநெறி
இப் பாடநெறி, அன்றாட மற்றும் தொழில்முறை அமைப்புகளில் பயனுள்ள தகவல் தொடர்புக்காக கற்பவர்களின் ஆங்கில பேச்சுத் திறனை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இடைத் தொடர்புப் பாடங்கள், பாத்திரமேற்று நடித்தல் மற்றும் குழு விளக்கக் காட்சிகள் மூலம், கற்பவர்கள் தன்னம்பிக்கையையும் சரளத்தையும் வளர்த்துக்கொள்வார்கள். தொழில் அல்லது கல்வி நோக்கங்களுக்காக தங்கள் ஆங்கிலத்தை மேம்படுத்த விரும்புவோருக்கு மிகவும் ஏற்றதாகும்.
மட்டம்
–
மட்டம்
–
மொடியுல்கள்
பாடத்திட்டத்தின் நோக்கங்கள்
- பேச்சுத் திறனை வலுப்படுத்துதல்
- தொடர்புத் திறன்களைச் செம்மைப்படுத்துதல்
- தினசரி மற்றும் தொழில்முறை சூழல்களில் சரியான மொழிப் பயன்பாட்டை வளர்த்துக் கொள்ளுங்கள்.
- காலம்: 03 மாதங்கள்
- கற்கைநெறிக் கட்டணம்: ரூ. 7,000.00
- கல்விசார் உத்தியோகத்தர்: ஆர்.ஹேவாசிங்க
- ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்: -
- இலக்குக் குழு: முச்சக்கரவண்டிச் சாரதிகள் / பொது மக்கள்
இரண்டாம் மொழிப் பயிற்சி கற்கைநெறிகள்
...
ஆசிரியர் பயிற்சி கற்கைநெறி
...
கண்காணிப்பு மற்றும் பின் தொடர்தல் அமர்வுகள்
...
சைகை மொழியில் சான்றிதழ் கற்கைநெறி
கை வடிவங்கள், அசைவுகள் மற்றும் முகபாவனைகள் உள்ளிட்ட அடிப்படை சைகை மொழித் திறன்களை வளர்ப்பதில் இக் கற்கைநெறி கவனம் செலுத்துகிறது. இது கற்பவர்கள் அடிப்படை சைகை மொழி உரையாடல்களில் ஈடுபடும் திறனைப் பெறவும், குறிப்பாக காது கேளாதோர் சமூகத்திற்குள் தினசரி தகவல்தொடர்புகளில் பயன்படுத்தப்படும் காட்சி சின்னங்களைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. இக் கற்கைநெறி உரைபெயர்ப்புத் திறன்களையும் உள்ளடக்குவதோடு, செவிடர் சமுதாயத்தைப் புரிந்துகொள்வதை ஊக்குவிக்கிறது. மரியாதைக்குரிய மற்றும் உள்ளடக்கிய தகவல்தொடர்பை வளர்க்கிறது.
தேசிய தொழிற் தகைமை (NVQ) மட்டம் - 03
NVQ
இலங்கை தகைமை கட்டமைப்பு (SLQF) மட்டம் - 01
SLQF
மொடியூல்கள்
- CSSL 001: சைகை மொழியின் அடிப்படைகள்
- CSSL 002: அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய குறியீட்டியல்
- CSSL 003: தொடர்பாடல் மற்றும் உரைபெயர்ப்பு
கற்கைநெறியின் நோக்கங்கள்
- கை வடிவங்கள், அசைவுகள், முகபாவனைகள் மற்றும் உடல்மொழி உள்ளிட்ட சைகை மொழியின் அடிப்படை கூறுகளை அறிமுகப்படுத்துதல்.
- கற்பவர்கள் எளிய உரையாடல்களில் ஈடுபடவும், அத்தியாவசிய தகவல்களை தெரிவிக்கவும் உதவுகின்ற சைகை மொழியில் அடிப்படை தொடர்பாடல் திறன்களை விருத்திசெய்தல்.
- செவிடர் சமூகத்திற்குள் அன்றாட வாழ்க்கைத் தகவல்தொடர்பாடல்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் காட்சி சின்னங்கள் மற்றும் சைகைகளில் கவனம் செலுத்துவதன் மூலம், குறியீட்டியல் பற்றிய புரிதலை மேம்படுத்துதல்.
- ஏற்றுக்கொள்ளும் மற்றும் வெளிப்படுத்தும் திறன்களை மேம்படுத்துதல், கற்பவர்கள் அடிப்படை சைகை வாக்கியங்களை துல்லியமாகவும் நம்பிக்கையுடனும் புரிந்துகொண்டு உருவாக்க அனுமதிக்கிறது.
- அன்றாட சூழல்களில் சைகை மொழியைப் பயன்படுத்துதல்.
- அடிப்படை மட்டத்தில் உரைபெயர்ப்புத் திறன்களை விருத்திசெய்வதற்கு, சைகை மொழிப் பயனர்களுக்கும் சைகை மொழியைப் பயன்படுத்தாதவர்களுக்குமிடையே தொடர்பை பாலமாக மாற்ற கற்பவர்களுக்கு உதவுதல்.
- செவிடர் சமுதாயம் மற்றும் தகவல் தொடர்பாடல் விதிமுறைகள் குறித்த பாராட்டை வளர்ப்பது, பல்வேறு சமூக அமைப்புகளில் மரியாதைக்குரிய மற்றும் ஊடாடும் தொடர்புகளை ஊக்குவித்தல்.
- கற்கைநெறியின் பெயர்: சைகை மொழியில் சான்றிதழ் கற்கைநெறி
- காலம்: 120 மணித்தியாலங்கள்
- கற்கைநெறிக் கட்டணம்: ரூ.33,500.00
- கல்விசார் உத்தியோகத்தர்: எல்.எம்.ரித்மா நிஷாதினி லன்சகார
- ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்: பீ. சிவா அஸ்வின்
- இலக்குக் குழு: க.பொ.த சாதாரண தரப் (சா/த) பரீட்சையைப் பூர்த்திசெய்தவர்கள் மற்றும் இந் நிகழ்ச்சித்திட்டத்தை தொடர ஆர்வமுள்ளவர்கள்

