The National Institute of Language Education and Training (NILET) is pleased to announce the launch of its Korean Language Course, specially designed for aspiring migrant workers and professionals ...
Accessibility Tools
எங்கள் சான்றிதழ் மற்றும் டிப்ளோமோ பாடநெறிகள்;
தேசிய தர நிலைகள் மற்றும் தொழில்துறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நடைமுறை அறிவு மற்றும் தொழில்முறை திறன்களை வழங்கக் கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
உயர்தர கற்றல் அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு பாடத்திட்டமும் தகுதிவாய்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் கள நிபுணர்களினால் நடத்தப்படுகின்றது.
நீங்கள் உங்கள் தொழில்துறை பயணத்தை ஆரம்பிப்பதானாலும்; அல்லது உங்கள் இருக்கும் திறன்களை மேம்படுத்துவதானாலும் இந்தப் பாடநெறிகள் உங்கள் கல்விசார் முன்னேற்றம் மற்றும்
தொழில்சார் வெற்றிக்கான சிறந்த அடித்தளத்தை உருவாக்குகின்றன.
எங்கள் இரண்டாம் மொழிப் பயிற்சிப் பாடநெறிகள், கற்பவர்களின் தொடர்பாடல் திறன்களையும், சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகப் பயன்படுத்துவதில் நம்பிக்கையையும் வளர்க்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகள் அன்றாடக் கல்வி மற்றும் தொழில்துறை அமைப்புகளில் நடைமுறை மொழிப் பயன்பாட்டை வலியுறுத்துகின்றன. அனுபவம் வாய்ந்த ஆலோசகர்;களினால் வழிநடத்தப்படும் பங்கேற்பாளர்கள், சமூக நல்லிணக்கம், பணியிட செயல் திறன் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை மேம்படுத்துவதற்குத் தேவையான மொழியியல் திறனைப் பெறுகின்றார்கள்.
பாடநெறிகளைப் பார்வையிடுகஎங்கள் ஆசிரியர் பயிற்சிப் பாடநெறிகள், கல்வியாளர்களுக்குப் பயனுள்ள, வகுப்பறை நடைமுறைக்குத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் நவீன கற்பித்தல் முறைகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகள் கற்பவரை மையமாகக் கொண்ட அணுகுமுறைகள், கல்வி உளவியல், பாடத்திட்ட மேம்பாடு மற்றும் கல்வியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. நேரடிப் பயிற்சி மற்றும் நிபுணர்களின்; வழிகாட்டுதல் மூலம், பங்கேற்பாளர்கள் கல்வித் துறையில் ஊக்கமளிக்கவும், வழிநடத்தவும், அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தவும் தயார்ப்படுத்தப்படுகின்றனர்.
பாடநெறிகளைப் பார்வையிடுககல்வி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளின் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக மேற்பார்வை மற்றும் மீளாய்வு அமர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த அமர்வுகள் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், பெறுபேறுகளை மதிப்பிடவும், பயிற்றுனர்கள் மற்றும் பயிற்சி பெறுபவர்கள் ஆகிய இரு சாராருக்கும் பயன்மிக்க பின்னூட்டலை வழங்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகின்றன. தொடர்ச்சியான மேற்பார்வை மற்றும் முறையான மீளாய்வின் மூலம், உயர் கல்வித் தரங்களைப் பேணுவதும் தொழில்முறையிலான வளர்ச்சியைப் போ~pப்பதும் எமது நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
அமர்வுகளைப் பார்வையிடுகசைகை மொழிச் சான்றிதழ் பாடநெறி செவிப்புலனற்றோர் மற்றும் செவிப்புலன்; குறைபாடுள்ள சமூகத்தினருடன் பயன்மிக்க தொடர்பாடல் திறன்களை விருத்திசெய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இப் பாடநெறி சைகை மொழியைப் பயன்படுத்துவதில் விரிவான பயிற்சியை வழங்குவதோடு சொல் வளம், இலக்கணம் மற்றும் வெளிப்பாட்டு நுட்பங்களில் கவனம் செலுத்துகின்றது. தகுதிவாய்ந்த பயிற்றுனர்களால் நடத்தப்படும் இப் பாடநெறி, கல்வி, பொருள் விளக்கம் மற்றும் சமூக சேவையில் தொழில் வாய்ப்புகளுக்காக வழிவகுக்கும் அதே வேளையில், சமூக உள்ளடக்கம், அனுதாபம் மற்றும் அணுகுதலை மேம்படுத்துகிறது.
பாடநெறிகளைப் பார்வையிடுக
The National Institute of Language Education and Training (NILET) is pleased to announce the launch of its Korean Language Course, specially designed for aspiring migrant workers and professionals ...
The course focuses on building language proficiency in listening, speaking, reading, and writing for both everyday and professional contexts. It emphasizes grammar, vocabulary, and comprehension ...
The National Institute of Language Education and Training (NILET) successfully completed the second training program of Business English for Bank of Ceylon on 6th July 2025. This program was ...