பணி
புதுமையான மற்றும் உயர்தர கல்வித் திட்டங்கள் மூலம் மொழியியல் புலமை மற்றும் கலாசாரப் புரிதலை வளர்த்தல்.
தூர நோக்கு
மொழிக் கல்வி மற்றும் கலாசார இடைத் தொடர்பாடலின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உலகளாவிய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக இருத்தல்.
எம்மைப் பற்றி
தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகமானது (NILET) 2007 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட ஒரு நியதிச்சட்ட சபையாகும். இலங்கை முழுவதும் மொழிக கற்றலை ஊக்குவிப்பதுடன் மொழியியல தோச்சியை மேம்படுத்தல் இதன் பணிப்பாணையாகும். ஆரம்பத்தில் நிறுவனமானது அரசகரும மொழிக கொள்கையை ஆதரவளிப்பதற்கு சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளை கவனத்திற்கொண்டது என்பதுடன் பின்னர் நாட்டின் வளர்ந்துவரும் மொழியியல் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கு பல்வேறு வெளிநாட்டு மொழிகள் மற்றும் ஏனைய மொழியுடன் தொடர்புடைய கற்கைநெறிகளை உள்ளடக்குவதற்கு அதன் கலைத்திட்டத்தை விரிவுபடுத்தியது.
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகமானது மொழிக் கல்வியில் முக்கிய நிறுவனம் ஒன்றாக செயல்படுகின்றது. அமைச்சுக்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் இணைந்து சிறப்பு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை வடிவமைத்து செயற்படுத்துகின்றது. உயர்தர மொழிப் பயிற்சியை வழங்குவதில் நிலைத்து நிற்கும் தன்மையை உறுதிசெய்து 2024 ஆம் ஆண்டில் இந்த நிறுவகமானது சுயநிதி மாதிரி ஒன்றாக மாறியது.
தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் கல்வி, தொழில்முறை மற்றும் சமூக நோக்கங்களுக்காக மொழித்திறன்களை அபிவிருத்தி செய்வதற்கு வடிவமைக்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட கற்கைநெறிகளை வழங்கி, பலவேறு கற்பவர்களுக்கு உதவிபுரிகின்றன. இந்த நிறுவகமானது பனமொழி சமூகத்தில் செழிக்கத் தேவையான மொழியியல் திறனைக் கொண்ட தனிநபர்களை ஆய்த்தப்படுத்துவதன் மூலம், மொழிக் கல்வியில் சிறந்து விளங்க தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.
தலைமை அலுவலகம்
321/1, ஹைலெவல் வீதி, மாக்கும்புர பன்னிப்பிட்டியவில்
தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் தலைமை அலுவலகம் 321/1, ஹைலெவல் வீதி, மாக்கும்புர பன்னிப்பிட்டியவில் அமைந்துள்ளது இந்த மத்திய இடம் பல்வேறு மொழிக் கற்கைநெறிகளை திட்டமிடல் மற்றும் செயற்படுத்துவதற்கான மையமாகச் சேவைப்புரிகிறது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மாக்கும்புர வெளிச் செல்லும்வழி மற்றும் மாக்கும்புர பல்நிலை போக்குவரத்து நிலையம் ஆகியவற்றிற்கு அருகில் வசதியாக அமைந்துள்ளது.
பிராந்திய பயிற்சி நிலையங்கள்
அகலவத்தை பயிற்சி நிலையம்
களுத்துறை மாவட்டத்திற்குள் அகலவத்தையின் கலேவத்தையில்
அகலவத்தை பயிற்சி நிலையமானது களுத்துறை மாவட்டத்திற்குள் அகலவத்தையின் கலேவத்தையில் அமைந்துள்ளதுடன், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் முக்கிய வசதியாக சேவைப்புரிகின்றது. கொழும்பிலிருந்து அண்ணளவாக 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த நிலையமானது, பிரம்மிக்க வைக்கும் இயற்கை காட்சிகளால் சூழப்பட்டுள்ளதுடன் கற்றலுக்கான அமைதியான மற்றும் உயிர்ப்பூட்டும் சூழலை உருவாக்குகின்றது.
25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நிலையம், நடைமுறை, அழகியல் மற்றும் அறிவுபூர்வமாகத் தூண்டும் சூழலை வளாக்கின்ற குடியிருப்பு வசதிகளுடன்கூடிய அழகிய அமைப்பை வழங்குகின்றது. இந்த தனித்துவமான சூழல் ஒட்டுமொத்த மொழிக கற்றல் அனுபவத்தை மேம்படுத்துகின்றது. இது ஆழமான கல்வி மற்றும் தொழில்முறை அபிவிருத்திக்கான சிறந்த இடமாக அமைகிறது.
குறிக்கோள்கள் மற்றும் பணிகள்
குறிக்கோள்கள்
- சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அத்தகைய அறிவைப் பெற விரும்புகின்றவர்களுக்கு அத்தகைய மொழிகளைக் கற்பித்தலுக்கான தகுதிவாய்ந்த ஆசிரியர்களை உருவாக்குதல்
- எழுத்திலான சட்டத்தினால் தாபிக்கப்பட வேண்டிய தேசிய மொழிபெயர்ப்பாளர்கள் சேவை மற்றும் தேசிய உரைபெயர்ப்பாளர்கள் சேவை என்பன கொண்டிருக்க வேண்டிய தகுதிவாய்ந்த சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் உரைபெயர்ப்பாளர்களை உருவாக்குதல்
- சிங்கள், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஆசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் உரைபெயர்ப்பாளர்களுக்கு மொழிப்பயிற்சி வழங்குவதற்குத் தகைமைவாய்ந்த பயிற்றுநர்களை உருவாக்குதல்
- பொதுமக்களுக்குப் பயனுறுதிவாய்ந்த சேவைகளை திறம்பட வழங்குவதற்காக மும்மொழிகளிலும் ஆற்றல்வாய்ந்த பயிற்றப்பட்ட ஆட்களை உருவாக்குதல்
பணிகள்
- சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அறிவைப் விரும்புகின்றவர்களுக்கு அத்தகைய மொழிகளைக் கற்பிப்பதற்குத் தகுதிவாய்ந்த ஆசிரியாகளை கிடைக்கச் செய்வதன்பொருட்டு சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் விரிவான பயிற்சிக்கு ஏற்பாடு செய்தல்
- நிறுவகத்தின் பயன்மிக்க தொழிற்பாட்டிற்காக ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளின் பெறுபேறுகளை பயன்படுத்தும் நோக்குடன் மொழிப்பயிற்சி தொடர்பான விடயத்தின்மேல் அத்தகைய ஆராய்ச்சிகள் மற்றும் ஆய்வுகளை நடாத்துதல்
- பொருத்தமான ஆட்களுக்கு மொழிகளில் பயிற்சி மற்றும் கற்பித்தலுக்கு ஏற்பாடுசெய்தலும் மற்றும் அத்தகைய பயிற்சி, கற்பித்தலைப் பூர்த்திசெய்வதும் சான்றிதழ்களையும் டிப் ளோமாக்களையும் அளித்தலும்
- மொழிகளில் கற்பித்தலை மேற்கொள்வதற்கென பயிற்றப்பட்ட ஆளணியினரின் அமைப்பு ஒன்றைக் கட்டியெழுப்புதல்
- மொழிகள் தொடர்பான கருமங்களில் தகவல் களஞ்சியமொன்றைத் தாபித்தல்
- உரைபெயர்ப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் சுருக்கெழுத்தாளர்கள் போன்ற விசேட வகுதியைச் சேர்ந்த ஆட்களுக்குக் குறித்துரைக்கப்பட்ட மொழிக கற்கைநெறிகளை சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் நடாத்துதல்
- சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மொழிசார் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், அவற்றிற்கு உதவியளித்தல் மற்றும் மேம்படுத்துதலுடன் அத்தகைய நடவடிக்கைகள் அவசியமானதெனத் தோன்றுமிடத்து சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் செய்யப்படவுள்ள மேம்பாடுகள் மற்றும் மாற்றங்கள் பற்றி இயைபான அதிகாரசபைகளுக்கு விதந்துரை செய்தல்












